மரண சண்டையுடன் தொடங்கும் தளபதி 63யின் படப்பிடிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் தளபதி 63.

Vijay - Altlee Combo thalapathy 63 begins from today

மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதால் இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கு எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரரா நடிக்கவிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கதிர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. அதில் படத்தில் விஜய், கதிர் இயக்குநர் அட்லி உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பின்னி மில்லில் சண்டைக்காட்சிகளுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.