நாம பாஸிட்டிவா இருப்போம் - தல தளபதி ரசிகர்களின் ஒற்றுமை குறித்து இந்த பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக். வித்தியாசமான வரிகளால் பாடல்களின் வெற்றிக்கு காரணமாக தனது பங்களிப்பை வழங்கிவருகிறார்.

lyricist Vivek about Thalapathy vijay on thalapathy 63 pooja

பின்னர் மெர்சல் படத்தில் இவர் எல்லாப் பாடல்களையும் எழுதியிருந்தார். குறிப்பாக இவர் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமைகள் குறித்து இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடல் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

பின்னர் சர்கார் படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதினார். தற்போது மீண்டும் அட்லி - விஜய் இணையும் தளபதி 63 படத்திலும் இவர் அனைத்துப் பாடல்களையும் இவர் எழுதவிருக்கிறார்.

தளபதி 63 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடலாசிரியர் விவேக்கும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,

மீண்டும் தளபதி விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல இவர் இனிமையாக இருந்தார். நேர்மறையாக இருந்தது.

பின்னர் ரசிகர் ஒருவர் அவரிடம், எங்கேயா இருந்த இவ்ளோ நாள். சிலர் அவரங்க சுயநலத்துக்காக ரசிகர்கள கொம்பு சீவி விட்டுட்டு இருந்தாங்க. விஜய் அஜித் ரசிகர்கள வச்சு காசுக்கும் பப்ளிசிட்டிக்கும் டிரை பண்ணாத முதல் ஆள் நீதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த விவேக் நன்றி பிரதர், சிலர் ரசிகர்களை வைத்து எதிர்மறையான விமர்சனங்கள் வைப்பார்கள். அன்புக்கு பவர் அதிகம் நான் நம்புறேன். நம்ம பாசிட்டிவ் சைட் ல இருப்போம் என்று பதிலளித்திருந்தார்.