ஒன் மோர் மட்டும் எவனாவது கேட்டீங்க ..... பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் பேட்ட. 

Karthik Subbaraj shares his experience with Rajinikanth and Petta

பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் 90களின் ரஜினியை இந்த படத்தில் பார்த்ததாக ரசிகர்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் பேட்ட படம் குறித்தும் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அதில் , 

நுன்சக்கு சண்டைக்காட்சி வச்சா நல்லா இருக்கும்னு நான் நினச்சேன்.  ரஜினிகாந்த் சரியா வருமானு கேட்டார்.

மேலும், நுன்சாக்கு என்றாலே நம் நினைவுக்கு வருவது புரூஸ்லீ தான். நாம பண்ணா சூப்பரா இருக்கனும். என்றார், அதற்கு நீங்க பண்ணா சரியா வரும் சார் என்று சொன்னேன்.

பின்னர் பீட்டர் ஹெயின் மாஸ்டரும் அதான் சொன்னார். வேற எதாவது இன்ஸ்ட்ரூமென்ட் டிரை பண்ணலாமானு கேட்டார். இல்ல இதான் கரெக்டா இருக்கும்னு நான் உறுதியா இருந்தேன்.

பின்னர் ஷூட் பண்ணும் போது தான் தெரிஞ்சது அத அவர் தொடர்ச்சியா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்காருனு.

அவர் செஞ்சதும் செட்ல இருக்க எல்லாரும் கை தட்னோம். எங்கள பார்த்த அவர், ஒன் மோர் மட்டும் எவனாவது கேட்டீங்க என்றார்,

ஒன் மோர் மட்டும் எவனாவது கேட்டீங்க ..... பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி VIDEO