STM Banner USA
VRV Banner USA

ரஜினியின் போயஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்புக் கோரி அவரது மனைவி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

Latha Rajinikanth seeks police protection for Rajini's Poes Garden House

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் என்பவருக்கும் வரும் பிப்.10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெறுகிறது. திருமணத்தை தொடர்ந்து பிப்.12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதையொட்டி போயஸ் தோட்டத்தில் உள்ள தங்களது இல்லத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்தில் லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து உதவியும் அளிக்குமாறு தனது மனுவில் லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.