சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணையும் படத்தின் அதிரடி அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்திலும், ராஜேஷ். எம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Sivakarthikeyan - nayanthara film directed by Rajesh M first look release on Feb 2

இருவரும் இணைந்து நடித்து வேலைக்காரன் திரைப்படம் ஏற்கனவே வெற்றி பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற பிப்ரவரி 2 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. பொதுவாகவே இயக்குநர் ராஜேஷ் படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இதில் சிவகார்த்திகேயன் வேறு இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது.