விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் சேதுபதி தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்துக்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன் இசையமைக்கவிருக்கிறார்.

Shruti Haasan to act with Vijay Sethupathi in SP Jananathan's film

மேலும், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமாருடன் இணைந்து சிந்துபாத் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். இந்த இருபடங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

அதனைத் தொடர்ந்து இயற்கை, பேராண்மை படங்களின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாக பாரட்டப்பட்டது. இதனால் இந்த படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.