மக்கள் செல்வனின் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Shooting update of Vijay Sethupathi's next with Vijay Chander is revealed

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச்.4ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். ‘சுந்தரபாண்டியன்’, ‘ரம்மி’ ஆகிய திரைப்படங்களுக்கு பின் 3வது முறையாக காமெடி நடிகர் சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

மேலும், நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 4ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.