உதவி இயக்குநர் கனவோடு இந்த வீட்டின் வாசலில் வந்து நின்றேன். ஆனால் தற்போது..?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

யதார்த்த படங்களின் மூலம் மிகவும் புகழ் பெற்ற மலையாள இயக்குநர்களில் ஒருவர் பரதன்.  இவர் 'ஆவாரம் பூ', ;சிவாஜி கணேசன் - கமல்ஹாசன் இணைந்து நடித்த 'தேவர் மகன்' உள்ளிட்ட புகழ் பெற்ற தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். 

Seenu Ramasamy shares his woriking experience with KPAC Lalitha in Vijay sethupathi's Mamanithan

இவரது மனைவி கே.பி.ஏ.சி. லலிதா பரதனும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழிலும், காதலுக்கு மரியாதை, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி சமீபத்தில் ஒரு ட்வீட் செயதுள்ளார். அதில், திரு. யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் திருமதி கே.பி.ஏ.சி லலிதா பரதன் அவர்களை இயக்கும் சந்தர்பம் கிடைத்தது.

21 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டின் வாசலில் உதவி இயக்குநர் ஆகும் கனவோடு நின்ற நினைவுகளோடு இது காலம் தந்த ஆசியென உணர்ந்தென். என்று பகிர்ந்துள்ளார்.  தொடர்ந்து அவர் வீட்டிற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.