சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கும் யங் மேஸ்ட்ரோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK15 திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Yuvan Shankar Raja to score music for Sivakarthikeyan's SK15

‘சீமராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

SK15 திரைப்படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும், ‘நாச்சியார்’ பட நடிகை இவானாவும் நடிக்கவுள்ளனர். இதில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்த யுவன் ஷங்கர் ராஜா,   SK15 திரைப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன் - யுவன் காம்போ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.