இந்த படத்திற்காக எம்ஜிஆர் பாடலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

Sources said Sivakarthikeyan's Production No.2 titled as Nenjamundu Nermaiyundu

இந்த படத்தில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆர்ஜே ரியோ ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கு எம்ஜிஆரின் பிரபல பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதி செய்வதற்காக படக்குழுவை அணுகிய போது,  அந்த தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துவரும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.