சிவகார்த்திகேயன் பர்த்டே கொண்டாட்டம் ஆரம்பம்- ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mrலோக்கல் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

Mr Local teaser will be releasing tomorrow as surprise of Sivakarthikeyan Birthday

ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும்  Mrலோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. காமெடி எண்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை Mrலோக்கல் படக்குழு தொடங்கியுள்ளது. இப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு ரிலீசாகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வரும் மே.1ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.