தளபதி 63- லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய முக்கிய அப்டேட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 63- Nayanthara likely to join the sets in March second week

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் பாடல், சண்டை காட்சிகள் அடங்கிய முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதி 63 படத்தின் ஷூட்டிங் பணிகளை வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் பிரசாத் லேபில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.