தளபதி 63-ல் இணைந்த ராக்ஸ்டார் சூப்பர் சிங்கர் பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 6 போட்டியாளர் கபீஸ் பூவையார் நடிக்கவுள்ளார்.

Thalapathy 63: Rockstar Kapse Poovaiyar to act alongside with Vijay

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல் பாடும் போட்டியாளராக இருப்பவர் கபீஸ் பூவையார். தனது ஸ்டைலில் பாடல்களை பாடி அசத்தும் பூவையார் தனக்கென தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரது பாடல் மற்றும் நடிப்பு திறனை பார்த்து இயக்குநர் அட்லீ, தளபதி 63 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வமாக வெளியானது.

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிப்பது மட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு கானா பாடல் பாடும் வாய்ப்பும் கபீஸ் பூவையாருக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டென்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

விளையாட்டு சம்மந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.