தன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Vijay sethupathi clarifies controversy on him about bagavat gita

இதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி தற்போது சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். முன்னதாக கடந்த 6ஆம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் ’டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது பேசிய அவர், ‘செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்திகளாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதனை மாற்றி விஜய்சேதுபதி, புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்மறை கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.

மேலும், ’என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬.

‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬." எனக் குறிப்பிட்டுள்ளார்.