'தடம்' படத்தின் லிப் லாக் சீன் குறித்து சீக்ரெட் சொல்லும் இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'முன்தினம் பார்த்தேனே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'தடையற தாக்க' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

Director Magizh thirumeni revealed the secret behind the lip lock scene in Thadam

தற்போது மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து தடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவர் தடம் குறித்த சுவாரஸியமான விஷயங்களை Behindwoods தளத்தில் பதிவு செய்தார். அப்போது தடம் படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும் உடன் இருந்தார்.

அப்போது பேசிய மகிழ் திருமேணி, செல்வராகவனுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவங்கள், கௌதம் மேனனுடன் 'காக்க காக்க' படத்தில் பணிபுரிந்த போது சூர்யா - ஜோதிகா காதல் உள்ளிட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற முத்த காட்சிகள் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனியிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், படத்துக்கு ஒரு கிஸ்ஸிங் சீன் தேவப்பட்டுச்சு. தமிழ் சினிமாவில் அழகான முத்தக் காட்சியாக அது இருக்கும். 

ஆனால் சென்சாருக்கு படம் வந்த போது, அந்த சீனை பார்த்த அதிகாரிகளுக்கு படத்தின் அருண் கடித்தது போல இருந்திருக்கிறது.  அதனால் அதனை டிரிம் செய்து கொடுங்கள் என்றனர்.  அப்போது அருண் கிட்ட கடிச்சீங்களானு கேட்டேன். உடனே அவர் பதறினார். என்றார்.

'தடம்' படத்தின் லிப் லாக் சீன் குறித்து சீக்ரெட் சொல்லும் இயக்குநர் VIDEO