BREAKING - அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ ஹீரோயின் இவரா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி வெளியாகவுள்ளது.

Ritika Singh will play the female lead in Arun Vijay's 'Boxers'?

அதைத் தொடர்ந்து ’மூடர் கூடம்’ நவீன் இயக்கிவரும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார். பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு நாளை காலை 8 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் நடித்த ரித்திகா சிங் தான் நடிக்கவுள்ளார் என்று Behindwoods-க்கு செய்தி கிடைத்துள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்போம்.