விஜய் ஆண்டனி - அருண் விஜய் இணையும் இந்த படத்தின் புதிய அப்டேட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

மூடர் கூடம் திரைப்படம் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர் நவீன். தனது வித்தியாசமான கதை சொல்லலால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

New Update on Vijay antony and Arun Vijay's Agni Siragugal

அதனைத் தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கிவருகிறார்.  இந்த படத்தில் அருண் விஜய்  மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தில் நடிகை ஷாலினி பாண்டேவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையைமைத்துள்ளார்.  இந்த படத்தின் முதல் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.