சிம்புவின் ரெட் கார்ட் பார்ட்டில நடந்தது என்ன? - உண்மையை உடைத்த அருண் விஜய்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிம்புவின் பிறந்தநாள் பார்ட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் அருண் விஜய் பகிர்ந்துக் கொண்டார்.

Arun Vijay Opens up about Simbu's Red Theme Birthday Party

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேணி இயக்கத்தில் ‘தடம்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இந்நிலையில், Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில், தடம் திரைப்படம் குறித்தும், நடிகர் சிம்புவின் பர்த்டே பார்ட்டி குறித்தும், கஜா புயலின் போது நிவாரண உதவிகள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்.

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டிற்கு பின்னர் சிம்புவை அவரது பர்த்டே பார்ட்டியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரை நேரில் சந்தித்து வாழ்த்தவே பார்ட்டிக்கு சென்றிருந்தேன். ரெட் தீமில் சிம்பு பர்த்டே பார்ட்டியில் நண்பர்கள் பலரை சந்திக்க முடிந்தது. நன்றாக இருந்தது என்றார்.

மேலும், தடம் திரைப்படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்றும், இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அருண் விஜய் கூறினார். கஜா புயலின் பாதிப்பின் போது நேரடியாக களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை செய்ததற்கு முக்கிய காரணம் சென்னை வெள்ளம் போன்ற கொடூரமான இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டதால், கஜா புயலின் பாதிப்பை உணர முடிந்தது என்றார்.

இது தவிர அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘சாஹோ’, ‘பாக்ஸர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் ரெட் கார்ட் பார்ட்டில நடந்தது என்ன? - உண்மையை உடைத்த அருண் விஜய் VIDEO