இந்த படத்தில் தனது கொடியை முதன் முதலாக பறக்கவிட்ட விஜயகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். அவரது படங்களில் இடம் பெறும் ஆக்சன் காட்சிகள் மற்றும் அனல் பறக்கும்  வசனங்கள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

DmDk leader Vijayakant shares Vallarasu scene on twitter

கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார்.  பின்னர் தனது முயற்சியால் எதிர் கட்சித்தலைவர் என்ற நிலையை வெகு விரைவிலேயே அடைந்தார்.

இன்று தேமுதிகவின் கொடி நாள் என்பதால் தமது தொண்டர்களுக்கு விஜயகாந்த் ட்விட்டர் மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார்.

பின்னர் முதன் முறையாக வல்லரசு திரைப்படத்தில் தேமுதிக  கொடி இடம் பெறும் காட்சியை அவர் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த காட்சியில் வில்லனை நோக்கி கெத்தாக விஜயகாந்த்  நடந்து வர, அவரது பின்னால் தேமுதிக கொடி பறக்கும்.