இதற்காக பிரபல நடிகரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Sivakarthikeyan tweets about actor satheesh in Mr local set

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சதீஷ்  கிரிக்கெட் சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், அடேய் அம்பயர், அது வொய்டுயா என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், யோவ் இங்க உனக்கு டேக் ஒன் மோர் னு டைரக்டர் சொல்லிட்டுருக்காரு யா ... அத பன்றத விட்டுட்டு ட்வீட்டு என நக்கலாக தெரிவித்துள்ளார். இதற்கு பின்னூட்டமிட்டமாக வீடியோ ஒன்றை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

அதில், சிவகார்த்திகேயன் தனது மொபைலில் டைப் செய்து கொண்டிருக்க அதை பார்க்கிறார். பின்பு என்ன திட்டி தான் இவ்ளோ நேரம்  டைப் பண்ணிட்டு இருந்தியாபா ? அந்த கடைசி ரியாக்ஷன்லயாவது உஷாராகி இருக்கனும்  என்று தெரிவித்துள்ளார்.