மீண்டும் போலீஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் 'சேதுபதி' நாயகி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி  தயாரிக்கும் படம்  தமிழரசன்.  இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

Remya Nambeesan to pair up with Vijay Antony in Thamilarasan

இந்த படத்தில் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார்.  மேலும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பழனிபாரதி, ஜெய்ராம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும்  அனல் அரசு இந்த படத்துக்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.  இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி -  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் சென்னையில் 15 நாட்கள் படமானது.

அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்  மற்றும் போராட்டக் காட்சிகளை   4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கியுள்ளார்.