சீனாவில் குங்பூ சண்டை போட்ட நடனப்புயல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ‘எங் மங் சங்’ திரைப்படத்தின் சண்டை காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டது.

Prabhudeva's Yang Mang Chang stunt scenes shot in China

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை அர்ஜுன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு  ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் மிகுந்த பொருட்செலவில் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தினர்.

இதில் பிரபுதேவா வில்லனுடன் மோதும்  சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுவதால் கூடுதல் சிரமம் எடுத்து சண்டைக் காட்சிகளை ஸ்ட்ண்ட் சில்வா அமைத்துள்ளார்.