என் இசையை கேட்டு அஜித்தும் விஜய்யும் கொடுத்த ரியாக்ஷன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசையமைப்பாளர் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் 'ஜெர்ஸி' என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய மறக்கவில்லையே என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

Anirudh shares Ajith and Vijay's reaction on his music

அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்துக்கும் அவர் இசையமைக்கிறார். மேலும் '24' இயக்குநர் விக்ரம் கே.குமார் நானியை வைத்து இயக்கும் 'கேங் லீடர்' என்ற படத்துக்கும் அவர் தான் இசை.

இந்நிலையில் தனது இசைப் பயணம் குறித்து அவர் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவரது அறையில் இருக்கும் பியோனா பற்றி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அனிருத், அது 'கத்தி' திரைப்படத்தின் பாடல்களை கேட்டு விட்டு விஜய் சார் எனக்கு அளித்த பரிசு. அது எனக்கு மறக்க முடியாத பரிசு. ஏனெனில் கத்தி திரைப்படம் எனக்கு கிடைத்த முதல் மிகப்பெரிய வெற்றி படம். அதனால் அது எனக்கு என் வாழ்வின் முடியாத ஒன்று.என்றார்.

பின்னர் உங்களது இசையைக் கேட்டுவிட்டு  தலயும், தளபதியும் என்ன சொன்னாங்க என்று தொகுப்பாளர் கேட்டார்.  அதற்கு பதிலளித்த அவர்,  'கத்தி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் பக்கம் வந்து என்ற பாடல் தான் முதலில் கேட்டார். படத்தின் ஓபனிங் பாடலுக்கு இது சரியாக இருக்கும் என்றார். அந்த பாடலில் விஜய் நன்றாக நடனமாடியிருந்தார்.

'வேதாளம்' படத்தில் பாடல்கள் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த படத்தின் தீம் பாடல் தான் முதலில் கேட்டார் என நினைக்கிறேன். உடனே போன் பண்ணி சூப்பரா இருந்தது என்றார். 'விவேகம்' தலை விடுதலை பாடல் கேட்டுவிட்டு மிகவும் நன்றி என்று சொன்னார். 

என் இசையை கேட்டு அஜித்தும் விஜய்யும் கொடுத்த ரியாக்ஷன் VIDEO