பரபர அரசியல் சூழலில் விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் விஜய்காந்த். தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

RajiniKanth meets actor come political leader Vijayakanth in his residence

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளநிலையில் அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவரை சந்தித்தார். இது நட்பு ரீதியாகச் சந்தித்ததாக கூறப்பட்டது. மேலும் விஜயகாந்த் பூரண நலம் பெற ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் விஜய்காந்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் ரஜினிகாந்த் - விஜயகாந்த்தின் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.