நீங்க படம் மட்டும் நடிங்க தளபதி - இதனை விஜய்யிடம் கூறியது யார் தெரியுமா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'சர்கார்' வெற்றிக்கு பிறகு  நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  மேலும் 'பரியேறும் பெருமாள்' மூலம் கவனம் ஈர்த்த கதிர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

DD shares her first photo experience with Thalapathy Vijay

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  'துப்பாக்கி' படத்தின் போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டிருந்தார். அப்போது நான் அருகில் வேறொரு படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன்.   அப்போது நடிகர் விஜய் அருகில் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன்.

அப்போது கேரவனில் விஜய் சார் இருந்தார். எனக்கு முன் முருகதாஸ் நின்று கொண்டிருந்தார். அவர் சந்தித்ததற்கு பின் விஜய்யின் உதவியாளர்கள் என்னை அழைத்தனர். நான் இதுவரை விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

பின்பு நான் அவரிடம் நீங்கள் படம் மட்டும் நடியுங்கள் தளபதி. அதை ஹிட்டாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என்றேன். எதற்காக அப்படி சொன்னேன் என்று தெரியவில்லை. என்றார்.

நீங்க படம் மட்டும் நடிங்க தளபதி - இதனை விஜய்யிடம் கூறியது யார் தெரியுமா ? VIDEO