தல-யா? தளபதியா? - விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தல-தளபதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்பது குறித்து விஜய் டிவி பிரபலம் குமரன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Thalapathy Vijay's Bro or Thala Ajith's Villain? - Vijay TV Kumaran Reveals

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசை வென்ற நடிகர் குமரனும், அதே நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக இருந்த மணி என்பவரும் Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.

நடிகர் குமரன், சீரியல், ஜோடி நிகழ்ச்சி மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல நடிகர்களை போல் நடித்துக் காட்டி லைக்ஸ் அள்ளும் குமரனிடம், தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரில் யாருக்கு தம்பியாகவும், யாருக்கு வில்லனாகவும் நடிக்க விருப்பம் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த குமரன், தளபதிக்கு தம்பியாகவும், தல அஜித்திற்கு வில்லனாகவும் நடிப்பேன் என்றார். டப்ஸ்மேஷ் வீடியோக்களில் தளபதி விஜய்யின் வீடியோக்களை அதிகம் ட்ரை செய்வதுண்டு. அவரை கூர்மையாக கவனித்து அவரது மேனரிசத்தை அப்படியே பின்பற்றி டப்ஸ்மேஷ் செய்வது வழக்கம். கமெண்ட்ஸிலும் அதை பலரும் கூறியிருக்கிறார்கள். இதனால், விஜய்க்கு தம்பியாக நடித்தால் சரியாக இருக்கும் என்றார்.

அதேபோல், தல-ன்னா மாஸ் தான். அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால், அந்த வில்லன் கதாபாத்திரம் வேற ரேஞ்சில் இருக்கும், கண்டிப்பா அது எனக்கு சவலான கதாபாத்திரமாக இருக்கும் என்றார்.

மேலும், குமரனும், மணியும் ஜோடி நிகழ்ச்சியில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டனர்.

தல-யா? தளபதியா? - விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக் VIDEO