மக்கள் செல்வனின் ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்த சூப்பர் அப்டேட் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச்.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Vijay Sethupathi's 'Super Deluxe' releasing worldwide on March 29

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழு வெளியிடவுள்ளது. 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இதன் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மார்ச்.29ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.