பாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தல அஜித் நடித்து வரும் ‘தல 59’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

Shraddha Srinath makes her Bollywood debut in Milan Talkies

திக்மான்ஷு துலியா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அலி அஃப்சல் நடிக்கும் ‘மிலன் டாக்கீஸ்’ என்ற ரொமாண்டிக் திரைப்படத்தின் மூலம் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கன்னட, தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ள ‘மிலன் டாக்கீஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் மார்ச்.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 59’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ‘தல 59’ திரைப்படம், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

‘பிங்க்’ படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா நடிக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘தல 59’ ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.