தல 59ல் அஜித்துக்கு ஜோடி இவர் தான்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Vidya balan pair with Ajith in Thala 59

இதனையடுத்து அஜித் சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று இயக்குநர் வினோத் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதனை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக  பிரபல நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். இது அவரது முதல் தமிழ் படமாகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பிங்க் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.