அஜித்துடன் நடிக்கும் விக்ரம் வேதா ஸ்டார்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

Vikram Vedha actress Shraddha Srinath officially joins Ajithkumar's 'Thala 59'

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 59வது படமான இப்படத்தில் ‘விக்ரம் வேதா’ நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தல 59 திரைப்படத்தின் கதாபாத்திரம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘கடந்த சில நாட்களாக தல 59 படத்தில் நான் நடிக்கவுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவின. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஆம், அஜித் சாருடன் நடிக்கிறேன். மிகவும் சவாலான ரோலில் நடிக்கிறேன். ஹெச்.வினோத், போனி கபூர் புரொடக்‌ஷன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா - இந்த டீமுடன் பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளது.

இப்படத்தின் கதை மற்றும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமான படம் இது. இப்படத்தில் நடிக்க நான் ரெடி. வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் பெரிய பெரிய நன்றி’ என ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.