தல 59 மூலம் தமிழில் அறிமுகமாகும் ‘மயிலு’ மகள்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் ‘தல 59’ திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

Jahnvi Kapoor to made her Tamil debut with Thala Ajith's 'Thala 59'?

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக ‘தல 59’ திரைப்படம் உருவாகவுள்ளது. சமீபத்தில் பூஜை போடப்பட்ட இப்படத்தின், ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியாங், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘தல 59’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது குறித்து விசாரித்தபோது, படக்குழு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக ஜான்வி கபூர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.