சினிமா மீது தீராக் காதல்.. 96 டீமுக்கு பார்த்திபன் கொடுத்த காதல் சின்னம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயற்கையாகவே சினிமாவை காதலிக்கும் நடிகர் பார்த்திபன், காதல் படமான ‘96’ படத்தின் வெற்றிவிழாவில் படக்குழுவினருக்கு வித்தியாசமான காதல் சின்னம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

Parthiban gifted '96 wall clock to '96 team with love

நடிகர் விஜய் சேதுபதி-த்ரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் காதலர்கள் மட்டுமின்றி மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழாவில், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும், பல திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் 96 படக்குழுவினருக்கு 9 மற்றும் 6 முள்களுடன் கூடிய கடிகாரத்தை படக்குழுவினருக்கு பரிசாக வழங்கினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், ‘இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்.... 'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96’ என்று ட்வீட்டியுள்ளார். பார்த்திபனின் இந்த வித்தியாசமான காதல் சின்னம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.