போதை ஏறி புத்தி மாறி : வாழ்க்கைல ஒரு மனுஷனால தவிர்க்க முடியாதது எது?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்கத்தில் குறும்பட நாயகன் தீரஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

‘போதை ஏறி புத்தி மாறி’திரைப்படம் பற்றி இயக்குநர் சந்துரு கூறுகையில், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் "If & but" போன்ற வார்த்தைகள் எப்படி முக்கியத்துவம் பெறுகிறதோ அதே போல் தான் போதையும், மயக்கமும். அது மனிதரின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது என்பதை அழுத்தமாக சொல்லும் படமாக ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம் உருவாகி வருகிறது.

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கே பி இசையமைக்கிறார். இப்படம் விறுவிறுப்பான திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் குறும்படங்கள் மூலம் பிரபலமான நடிகர் தீரஜ், இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் கூறப்படும் விஷயம் ரசிகர்களுடன் நன்றாக பொருந்தும் என்றும் இயக்குநர் சந்துரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.