எவ்ளோ அழகு! த்ரிஷாவ தான் பாத்துட்டு இருக்கேன் - விஜய் சேதுபதி ஜாலி டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் சேதுபதி-த்ரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷாவை பார்க்கவில்லை என்றால் அது படைத்தவனுக்கு செய்யும் துரோகம் என வர்ணித்து பேசினார்.

Vijay Sethupathi describes Trisha's beauty in 96 100th day celebration

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் காதலர்கள் மட்டுமின்றி மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும், பல திரை பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ‘நான் இங்கு வந்ததில் இருந்து த்ரிஷாவை தான் பார்த்துட்டு இருக்கேன். இவ்ளோ அழகான ஒரு பொண்ண பார்க்கலன்னா அது படைச்சவனுக்கு செய்ற துரோகம். கடவுள் கிட்ட கேட்டேன், எனக்கு ஏன்ப்பா கண்ண வெச்சன்னு, அழகான பொண்ண பார்க்க தான் என்றார். அதனால பார்க்கலாம் தப்பில்ல' என்றார்.

எவ்ளோ அழகு! த்ரிஷாவ தான் பாத்துட்டு இருக்கேன் - விஜய் சேதுபதி ஜாலி டாக் VIDEO