வெங்கட் பிரபுவின் அடுத்த படத்துக்கு தியேட்டர் ரிலீஸ் இல்லையா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஸ்பைசி கூல் இம்ப்ரசன்ஸ் மற்றும் பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் முரளி கார்த்திக் இயக்கியுள்ள படம் களவு. திரில்லர் வகைப் படமாக கூறப்படும் இதில் நடிகர்கள் கலையரசன், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Venkat Prabhu's Kalavu movie will release in Zee 5

சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது ஜீ-5 தளத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஜீ-5 செயலியின் மூலம் காணலாம்.

இதனையடுத்து இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கதிர் நடிப்பில் உருவான சிகை திரைப்படமும் ஜீ-5 தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.