என் படத்திற்கு இசையமைத்த இளையராஜா - ஷங்கர் சொன்ன சுவாரஸியத் தகவல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலக பிரபலங்களும் நடிகர்களும் கலந்துகொண்டு இளையராஜாவின் திறமையை பற்றி புகழ்ந்து பேசினர்.

Shankar shares his working experience with Ilaiyaraaja along side Kamalhaasan

அதன் ஒரு பகுதியாக இயக்குநர் ஷங்கர் மேடையேறி இளையராஜா பற்றி பேசினார். அப்போது எனது முதல் படமான ஜென்டில்மேன் படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

அவரை சந்திப்பதற்காக அனுமதியும் வாங்கியிருந்தேன். ஆனால் அவர் மீது பயம். எப்படி வேலை செய்வது என்பதால் அதன் பின்னர் சந்திக்கவில்லை. ஆனால் அரசுக்காக நான் இயக்கிய வருமான வரி விழிப்புணர்வு விளம்பரத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தார். அதில் கமல் நடித்திருந்தார்.

அந்த இசையில் சில திருத்தங்களை சொன்னேன் . உடனே அவரும் எந்த தயக்கமுமின்றி செய்து கொடுத்தார் என்றார்.