இந்தியன் 2 வில் நடிக்கிறேனா ? விவேக் விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

2.0 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

vivekh clarifies about Kamal haasan and shankar's indian 2 controversy

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 18 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.  இந்த  படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

ரவிவர்மன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் நடிகர் விவேக் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள விவேக்,

அபூர்வ சகோதரர்கள் வெளியான நாட்களில் இருந்தே நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன். அவர் கூட நடிக்கிறேனோ இல்லியோ , ஆனால் இப்பொழுதும் அவரது ரசிகன் நான்.

இந்த படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டால் ஷங்கர் என்னை கட்டாயம் அழைப்பார்.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.