'இந்த விஜய் படத்த தான் நான் பண்ணனும்னு கேட்டேன்'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்திருக்கும் படம் கண்ணே கலைமானே. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

Udhayanidhi stalin shares his experience with Seenu Ramasamy and Yuvan Shankar Raja in Kanne Kalaimaane

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படம் நாளை (பிப்ரவரி 22) வெளியாகவிருக்கிறது.

இதனையடுத்து படம் குறித்தும், சீனுராமசாமி மற்றும் யுவனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,  ஓகே ஓகேவுக்கு பிறகு தொடர்ந்து ஒரே மாதிரியான படங்கள் செய்து கொண்டிருந்தது எனக்கே போரடித்தது. அதனால் தான் மனிதன் படம் நடித்தேன். அந்த படம் என் கேரியர்லயே மிக முக்கியமான படம். உண்மையாகவே நானும் அஹமத்தும் இதயம் முரளி என்ற படம் செய்வதாக இருந்தது.  அதுவும் காதல் கதை தான்.  ஆனால் நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ மனிதன் பண்ணோம். மனிதன்ல நடிச்சது எனக்கு நம்பிக்கையை அளித்தது. 

பின்னர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் எந்த நடிகரை வைத்து படம் இயக்க ஆசை என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்,  சற்றும் யோசிக்காமல் விஜய் மற்றும் ரஜினி என்றார்.  பின்னர் எல்லா பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதுவா அமையனும். நான் இதுவரை தயாரித்த படஙஅகள் அதுவாக அமைந்தது தான்.  நானா பண்ணனும்னு முயற்சி பண்ண படம் குருவி தான் என்றார்.

'இந்த விஜய் படத்த தான் நான் பண்ணனும்னு கேட்டேன்' VIDEO