சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இந்த ஹீரோயினுடன் இணையும் உதயநிதி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணே கலைமானே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

Udhayanidhi stalin new film titled Kannai Nambathe starring Messaya murukku fame Aathmika

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின்  இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீசைய முறுக்கு மூலம் பிரபலமான ஆத்மிகா நடிக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்துக்கு கண்ணை நம்பாதே என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்துக்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.