யாருடா நீங்கெல்லாம்... LKG டிரைலருக்கு கிடைத்த வேற லெவல் ரியாக்‌ஷன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் LKG திரைப்படத்தின் டிரைலருக்கு வட இந்தியா வரை வரவேற்பு கிடைத்துள்ளது.

North Indian Youtubers shared RJ Balaji's LKG trailer reaction

கே.ஆர்.பிரபு இயக்கத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் அறிமுகமாகிறார். பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதுள்ள அரசியல் மற்றும் அரசியல் தலைவர்களை நக்கலடிக்கும் விதமாக டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் தெர்மாகோல் முதல் மோடியின் ஃபிட் இந்தியா சவால் வரை பல விஷயங்களை வச்சி செய்துள்ள இந்த டிரைலருக்கு வட இந்தியாவில் வேற லெவல் ரியாக்‌ஷன் கிடைத்துள்ளது.

வட இந்திய யூடியூப் தளம் ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜியின் LKG டிரைலரை பார்த்து பாலாஜி குறித்தும், டிரைலரில் வரும் காட்சிகள் குறித்தும் பேசியுள்ளனர். இது கலக்கலான காமெடி கலந்த அரசியல் படம் என்றும் சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். இதை நடிகர் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யாருடா நீங்கெல்லாம்... LKG டிரைலருக்கு கிடைத்த வேற லெவல் ரியாக்‌ஷன் VIDEO