அதிரடி ஆக்‌ஷனில் அடித்து நொறுக்கும் விஷாலின் ‘அயோக்யா’ டீஸர் இதோ!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Vishal's 'Ayogya' teaser released

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக ‘அயோக்யா’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, தியேட்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த  படத்தின் டீஸரை இயக்குநர் ஏ,ஆர். முருகதாஸ் வெளியிட்டார். 

 

அதிரடி ஆக்‌ஷனில் அடித்து நொறுக்கும் விஷாலின் ‘அயோக்யா’ டீஸர் இதோ! VIDEO