பூவா... இல்ல புஷ்பமா? - சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேனிலிருந்து வெளியான பாடல் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரஸா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ ஷங்கர்  என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்த படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

Simbu and Sundar.C Vantha Rajavathaan Varuven Video Song

கடந்த வாரம் வெளியான இந்த படம் சிம்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் யோகி பாபுவின் காமெடியும் படத்துக்கு பக்கபலமாக அமைந்திருந்தது. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வாங்க மச்சான் வாங்க என்ற பாடல் யூடியூபில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இந்த படத்திலிருந்து ஒன்னுக்கு ரெண்டா என்ற பாடல் வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் சிம்புவுக்கும் மேகா ஆகாஷுக்கும் இடையிலான டூயட்டாக இந்த பாடல் படமாக்கப்பட்டிருந்தது.

பூவா... இல்ல புஷ்பமா? - சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேனிலிருந்து வெளியான பாடல் வீடியோ VIDEO