சிம்பு நாயகியின் இன்ஸ்டா அக்கவுண்ட்டில் கைவரிசை காட்டிய ஹேக்கர்ஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளவர் நடிகை மேகா ஆகாஷ்.

Petta, VRV actress Megha Akash's Instagram account hacked

மேகா ஆகாஷ் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’, சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘பூமராங்’ திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது. மேலும், ஏற்கனவே நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் மேகா ஆகாஷ் கைவசம் உள்ளது.

இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கப்பட்டு, அதில் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ரேண்டம் மெஸ்ஸேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், தனது பேக் எண்ட் குழு அதனை சரி செய்து வருவதாகவும் மேகா ஆகாஷ் தெரிவித்திருந்தார்.

தற்போது அதைத் தொடர்ந்து தனது பேக் எண்ட் குழுவின் கடின உழைப்பு, நீண்ட போராட்டத்துக்கு பின் எனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மீட்கப்பட்டது. துணை நின்ற அனைவருக்கும் நன்றி என மேகா ஆகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.