காதல் படம் தான், ஆனா அது இல்ல.... - ‘தேவ்’ குறித்து மனம் திறந்த கார்த்தி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள ‘தேவ்’திரைப்படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை நடிகர் கார்த்தி பகிர்ந்துக் கொண்டார்.

Dev is a love story, but it isn't about Romance - Karthi

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்.14ம் தேதி வெளியாகவிருக்கும் ‘தேவ்’, ஒரு காதல் படம் என்றும் ஆனால் அனைவரும் எதிர்ப்பார்க்கும் காதல் படமாக இருக்காது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும் என்றார்.

மேலும், இதில் தற்போதைய இளைஞர்கள் காதல், நட்பு, அப்பா-அம்மா உடனான உறவை எப்படி பார்க்கிறார்கள். எவ்வளவு சீக்கிரமாக உடல் ரீதியிலான ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடுகிறார்கள், சிங்கிள் பேரண்ட் உள்ளிட்ட விஷயங்கள் இப்படத்தில் ரொம்ப அழகாகவும், பாசிட்டிவாகவும், மேலோட்டமாகவும் கூறப்பட்டுள்ளது என்றார்.

காதல் படம் தான், ஆனா அது இல்ல.... - ‘தேவ்’ குறித்து மனம் திறந்த கார்த்தி VIDEO