தல - தளபதியுடன் நடிக்க விரும்பும் பிரபல நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான நடிகர் விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ‘தேவ்’ பட ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Actress Rakul Preet Singh wants to act with Thala Ajith and Thalapathy Vijay

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது மீண்டும் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்.14ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், Behindwoods-க்கு பேட்டியளித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான நடிகர் அஜித், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர்கள் மட்டும் அல்லாது மீண்டும் சூர்யா, கார்த்தி போன்றவர்களுடனும் நடிக்க விரும்புவதாக ரகுல் தெரிவித்துள்ளார்.

‘தேவ்’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் ரகுல் நடித்துள்ளார். இது தவிர ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தல - தளபதியுடன் நடிக்க விரும்பும் பிரபல நடிகை VIDEO