பிரியா வாரியர், வைரல் நாயகியின் முத்தக் காட்சி ஸ்னீக் பீக் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைத்தள சென்சேஷன் நடிகை பிரியா வாரியர் நடித்துள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

A sneak peek from Priya Varrier's 'Oru Adaar Love' released

மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் மூலம் ஒரே இரவில் சமூக வலைத்தள பிரபலமானாவர் நடிகை பிரியா வாரியர். பிரியா பிரகாஷ் வாரியர் புருவத்தை அசைத்து கண்ணடிப்பதிலும், துப்பாக்கிச் சுடுவது போல் முத்தம் கொடுப்பதும் வைரலானது.

பிரியா வாரியர், ரோஷன் நடிப்பில் ஓமர் லுலு இயக்கியுள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. மலையாளம் மட்டுமின்றி இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், தமிழில் வெளியாகும் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகை பிரியா வாரியர், ரோஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை தமிழில் ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு வழங்குகிறார். காதலர் தின ட்ரீட்டாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

பிரியா வாரியர், வைரல் நாயகியின் முத்தக் காட்சி ஸ்னீக் பீக் வீடியோ VIDEO