கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்... அடிச்சிக்க ஆளே இல்ல..!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் சில கதாநாயகிகளின் தாக்கம் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்கும். அப்படிதான் குஷ்பு என்றாலே குஷ்பு இட்லியை தாண்டி ரசிகர்களின் நிலைவில் நிற்பது அவரது தனித்துவமான நடன அசைவுகள் தான்.

Khushbu's All Time Best Dance Performance on Stage

சரத்குமார்-குஷ்பு இணைந்து நடித்த ‘நாட்டாமை’ திரைப்படத்தில் வரும் ‘கொட்டா பாக்கு கொழுந்து வெத்தலை’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. இந்த பாடலில் குஷ்பு ஆடும் நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், எவர்க்ரீன் நடிகை குஷ்புவுக்கு Behindwoods Gold Medals விழாவில்  The Women Icon of Inspiration in Cinema என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற நடிகை குஷ்பு, தனக்கே உரிய ஸ்டைலில் கொட்டா பாக்கு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை அசரவைத்தார்.

இதைத் தொடர்ந்து குஷ்புவுக்காக மீம் பாய் போட்ட ‘செல்ஃபி குயீன்’ மீம் பற்றி பேசிய குஷ்பு, செல்போன் கேட்ஜெட்டை பயன்படுத்த தெரியாது, செல்ஃபி இப்படி தான் எடுக்கனும் என மகள்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஃபாலோ செய்தேன் என்றார்.

கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்... அடிச்சிக்க ஆளே இல்ல..! VIDEO