ஹரிஷ் கல்யாணின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ டிரைலர் இதோ..!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Harish Kalyan's 'Ispade Rajavum Idhay Raniyum' trailer released

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்தப் படமும் காதல் படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன், மாகாபா ஆனந்த், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘கண்ணம்மா’, ‘ஏய் கடவுளே’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் இடம்பிடித்தது. ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலரை இயக்குநர்கள் ராம், சீனு ராமசாமி, புஷ்கர்-காயத்ரி, வெங்கட் பிரபு, கவுதம் மேனன், கிருதிகா உதயநிதியுடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் இணைந்து ட்விட்டரில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹரிஷ் கல்யாணின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ டிரைலர் இதோ..! VIDEO