ஸ்டைலிஷ் தெலுங்கு நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரியா வாரியர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைத்தள சென்சேஷன் நடிகை பிரியா வாரியர், ஸ்டைலிஷ் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு தனது ஸ்டைலில் முத்தம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

Wink Girl Priya Varrier fires Kiss Bullet at Allu Arjun

மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் மூலம் ஒரே இரவில் சமூக வலைத்தள பிரபலமானாவர் நடிகை பிரியா வாரியர். பிரியா பிரகாஷ் வாரியர் புருவத்தை அசைத்து கண்ணடிப்பதிலும், துப்பாக்கிச் சுடுவது போல் முத்தம் கொடுப்பதும் வைரலானது.

பிரியா வாரியர், ரோஷன் நடிப்பில் ஓமர் லுலு இயக்கியுள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், தெலுங்கில் ‘லவ்வர்ஸ் டே’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா வாரியர், ரோஷன் உள்ளிட்ட அவரது படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கலந்துக் கொண்டார். பிரியா வாரியரை போல் கண்ணடித்தும், முத்தமிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதில் நடிகை பிரியா வாரியர் தனது ஸ்டைலில் அல்லு அர்ஜுனுக்கு துப்பாக்கிச் சுடுவது போல் முத்தம் கொடுத்து அவரை சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

ஸ்டைலிஷ் தெலுங்கு நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரியா வாரியர் VIDEO