அண்ணா,கலைஞர் பாதையில் 'ஸ்டாலின்' பயணிக்க வேண்டும்:விஜயகாந்த் வாழ்த்து

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 29, 2018 11:42 AM
Vijayakant greets MK Stalin on being elected as DMK president

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

 

இதைத்தொடர்ந்து திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும், தமிழக கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், ''திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் அவர்கள் பாதையில் திரு.ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக வழிநடத்த வேண்டும், தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,' என விஜயகாந்த் வாழ்த்தியிருக்கிறார்.